Tuesday, 10 February 2015

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15

Exam Results and CV Venue Details

EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST




Monday, 9 February 2015

மைக்ரோசாப்ட் நிறுவனதின் விண்டோஸ் 10- சிஸ்டம் சோதனைத் தொகுப்பினை குறித்த கேள்வி - பதில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10- சிஸ்டம் குறித்த சோதனைத் தொகுப்பினை, சென்ற ஜனவரி 21ல் வெளியிட்டது.

இதனைத்தான் பில்ட் 9926 என அழைக்கின்றனர்.

எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது சிஸ்டம் புரோகிராம் வெளிவரும் முன், அதற்கான சோதனைத் தொகுப்புகளை, இப்படிப் பெயரிட்டு அழைப்பதுதான் வழக்கம்.

கேள்வி: யாரெல்லாம், எந்த சிஸ்டம் பயன்படுத்துவோரெல்லாம், இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்த முடியும்?

    நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தி வருபவராக இருந்தால், அல்லது "இன்சைடர் புரோகிராமில்” ஓர் உறுப்பினராகப் பதிவு செய்திருந்தால், இதனையும் மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று, தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதும் அந்த திட்டத்தில் பதிவு செய்து, தரவிறக்கம் செய்து இயக்கலாம்.

கேள்வி: சென்ற தொழில் நுட்ப முன்னோட்ட சோதனைத் தொகுப்பிற்கும், இந்த நுகர்வோருக்கான தொகுப்பிற்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளனவா?

    பதில்: வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும், இருக்கின்றன. ஏனென்றால், இடைப்பட்ட கால அளவு மிக நீண்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனை முழுத் திரைக்கு மாற்றிக் கொண்டு இயக்கலாம். விண்டோஸ் 8 ஸ்டைல் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதே நேரத்தில், இதனை நீங்கள் விரும்பும் அளவிற்கு மாற்றியும் அமைக்கலாம். ஜம்ப் லிஸ்ட், ட்ராக் அண்ட் ட்ராப் வசதியும் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் போனில் அதிகம் பேசப்படும் கார்டனா, சர்ச் பாக்ஸ் வலப்பக்கம் கிடைக்கின்றன. இதற்கு சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

கேள்வி: சார்ம்ஸ் மெனுவிற்குப் பதிலாக என்ன தரப்பட்டுள்ளது?

    பதில்:வலது பக்கம், சார்ம்ஸ் மெனு இருந்த இடத்தில், ஆக் ஷன் சென்டர் (Action Center) தரப்பட்டுள்ளது. இங்கு நோட்டிபிகேஷன்ஸ் எனப்படும் அறிவிப்புகள் மற்றும் பொதுவான வேலைகளுக்காக, சில பட்டன்களும் தரப்பட்டுள்ளன. சார்ம்ஸ் மெனு மொத்தமாக எடுக்கப்பட்டுவிட்டது.

கேள்வி: பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுதி இருக்கிறீர்கள். என்ன மாதிரியான செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் தந்துள்ளது?

    பதில்: மைக்ரோசாப்ட், தன் விளக்கக் குறிப்பில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தரப்படுவதாக எழுதி உள்ளது. ஆனால், அவை இந்த சோதனைத் தொகுப்புகளில் இல்லை என்றே தெரிகிறது. பின்னர், மேம்படுத்தப்படுவதற்கான பைல்கள், அல்லது இறுதித் தொகுப்பு வெளியாகும்போது தெரிய வரலாம்.


கேள்வி: இந்த முன்னோட்ட சோதனைத் தொகுப்புகளைத் தொடர்ந்து நம்மால் இயக்க முடியுமா? இல்லை என்றால், அதற்குக் காலவரையறை உள்ளதா?

    பதில்: நல்ல கேள்வி. முன்பு தரப்பட்ட சோதனைத் தொகுப்பு மற்றும் அதன் மேம்படுத்தல் கோப்புகள் (builds 9841, 8660, மற்றும் 9879) வரும் ஏப்ரல் 15 அன்று காலாவதியாகிவிடும். புதியதாக வந்திருக்கும் ஆதடிடூஞீ 9926 அக்டோபர் 1, 2015 அன்று காலாவதியாகும். இறுதித் தொகுப்பு வெளியானால், இந்த இறுதிநாள் அறிவிப்பு எல்லாம் உடனே காலாவதியாகிவிடும்.

கேள்வி: தற்போதைய சோதனைத் தொகுப்பிலிருந்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்து கொள்ள முடியுமா?

    பதில்: மைக்ரோசாப்ட் இதற்கு "ஆம், முடியும்” என்றே பதில் அளித்துள்ளது.

கேள்வி: விண்டோஸ் 10 தொகுப்பில், கீ லாக்கர் எனப்படும், நாம் டைப் செய்திடும் கீகளின் வரிசையைத் தெரிந்து தகவல் அனுப்பும் புரோகிராம் உள்ளதாகவும், அதன் மூலம் மைக்ரோசாப்ட் நம் பைல்களை அறிந்து கொள்ளும் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா?

    பதில்: இது எந்த அளவிற்கு உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால், இது போன்ற ஒன்று இருப்பதாகவே அனைவரும் கூறுகின்றனர். எந்த அளவில் மைக்ரோசாப்ட் நாம் உருவாக்கும் பைல்களை அறிந்து கொள்ளும் என்பது குறித்து சரியான தகவல் இல்லை. மேலும், இதுவரை சோதனை செய்தவர்கள் யாரும் கீ லாக்கர் இருப்பதாகக் கூறவில்லை. எனவே, இல்லை என்றுதான் எண்ண வேண்டும்.

கேள்வி: புதியதாக, ஏதேனும் விண்டோஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளனவா?

    பதில்: ஆம், பயன்படுத்திய வகையில் சில ஷார்ட் கட் கீகள் அறியப்பட்டுள்ளன. உங்களிடன் இந்த சோதனைத் தொகுப்பு இருந்தால், இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.புதிய டெஸ்க்டாப் உருவாக்க Windows key + Ctrl + D
    முந்தைய டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Left arrow
    அடுத்த டெஸ்க்டாப் செல்ல Windows key + Ctrl + Right arrow

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் இயங்க என்ன ஹார்ட்வேர் தேவை? குறைந்த பட்சத் தேவை என்ன?

    இந்தக் கேள்விக்கான விரிவான பதில் வேண்டுவோர், http://windows.microsoft.com/en-us/windows/preview-faq-system-requirements-pc என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும். சுருக்கமாகச் சொல்வதென்றால், 1 ஜி.பி. வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரி,16 ஜி.பி. ஸ்டோரேஜ் இடம்
    ஆகியன குறைந்த அடிப்படைத் தேவையாகும். ஏற்கனவே, விண்டோஸ் 8 அல்லது 8.1 இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டருக்கு, அதிகப்படியான ஹார்ட்வேர் தேவை எதுவும் இல்லை.

கேள்வி: மைக்ரோசாப்ட் ஏன் தன் விண்டோஸ் போனில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அறிமுகப்படுத்துகிறது? இதனால் என்ன சாதிக்க முயற்சிக்கிறது?

    பதில்: மைக்ரோசாப்ட் லூமியா விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள், அண்மையில் நல்ல வர்த்தக முடிவுகளைக் காட்டியுள்ளன. ஆனால், அமெரிக்காவில், பெரும்பாலான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ளனவாக இயங்குகின்றன. இந்த நிலையை மாற்ற, மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஸ்மார்ட் மொபைல் போனிலும், ஒரே சிஸ்டத்தை வழங்கினால், அது வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

கேள்வி: ஸ்பார்டன் பிரவுசர் ஏதேனும் தனித்தன்மை கொண்டுள்ளதா? கூகுள் குரோம் பிரவுசரை அது பின்னுக்குத் தள்ளிவிடுமா?

    பதில்: ஸ்பார்டன் பிரவுசர் வழக்கமாக இல்லாமல், பல புதிய நவீன வசதிகளைத் தரும் என்றே தோன்றுகிறது. குறிப்புகள் எழுதி வைக்க வசதி, இணையத்தில் தளங்களைப் படிக்க, ஒவ்வொருவருக்கும் தனி பார்மட், டிஜிட்டல் உதவியாளராக கார்டனா எனப் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், கூகுள் குரோம் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளுமா என்று தெரியவில்லை. பலர் தங்களின் பல பணிகளைக் கூகுள் பிரவுசரில் தான் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அதனை விட்டு வரத் தயங்குவார்கள்.

கேள்வி: மைக்ரோசாப்ட் தன் தலைமை இடத்தில், நுகர்வோர் முன் காட்டிய விண்டோஸ் 10 விளக்கக் கூட்டத்தின் முழு நடவடிக்கைகளைக் காட்டும் வீடியோ கிளிப் வெளியிடப்பட்டுள்ளதா?

    பதில்: நல்ல கேள்வி. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக என்ன நடந்தது என்பதனை முழுமையாக விளக்கும் வீடியோ படம் யு ட்யூப் தளத்தில் உள்ளது. ஒருவர், அதனைச் சுருக்கி, 12.39 நிமிடங்கள் ஓடும் வீடியோ படமாகத் தந்துள்ளார். இதனைக் காணச் செல்ல வேண்டிய முகவரி https://www.youtube.com/watch?v=dR9SDuG58ZQ.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8, 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து நாட்டு பயனாளர்களுக்கும் பொருந்துமா?

    பதில்: குறிப்பிட்ட நாடுகளுக்கு என மைக்ரோசாப்ட் எந்த வரையறையையும் விதித்ததில்லை. ஆனால், நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 10 இலவசமில்லை என்பதனைத் தெளிவாகக் கூறியுள்ளது.தற்போது கிடைக்கும் சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் அதன் அறிமுகம் விழாவில் தெரிவித்த அனைத்து வசதிகளும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து வெளி வர இருக்கும், அல்லது பின் நாளில் மொத்தமாக வெளிவர இருக்கும் சோதனைத் தொகுப்பில் அவை கிடைக்கலாம். அதற்கான மேம்படுத்தப்படுவதற்கான கோப்புகளை மைக்ரோசாப்ட் நிச்சயம் வழங்கும். காத்திருப்போம்.


-டாக்டர் பெ.சந்திர போஸ்

நன்றி : தினமலர்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இணைய வர்த்தகத்துறையில் வரும் 6 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என இந்த தொழில் பிரிவில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்


இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும், இணைய வர்த்தகத்துறையில், வரும் 6 மாதங்களில், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என இந்த தொழில் பிரிவில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய இணைய வர்த்தகத்தின் இன்றைய மதிப்பு  ரூ. 73,759 கோடி (1,200 கோடி டாலர்). வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பல்வேறு இந்திய நிறுவனங்களைப் பல நிறுவனங்கள் தங்களுக்கு இணைய வர்த்தகத்தை நிர்வகித்திட ஆட்கள் தேவை எனக் கேட்டுள்ளனர். ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டில், இந்திய இணைய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ரூ.23,757 கோடியாக இருந்தது. 2013 ஆம் ஆண்டில் இது ரூ.77,447 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் இந்தப் பிரிவில் வளர்ச்சி 8முதல் 10 சதவீதமாக இருந்த போது, இந்தியாவில் 30% ஆக வளர்ச்சி பெற்றது.

இந்த வர்த்தகப் பிரிவினைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவால், அதில் ஈடுபடும் உயர்நிலை அலுவலர்களை நிறுவனங்களில் தக்க வைப்பதுதான். என்ன ஊதியம் கொடுத்தாலும், இந்த பிரிவில் ஈடுபடுபவர்கள், பணம் தவிர மற்றவற்றை எதிர்பார்க்கின்றனர் என, பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

மற்ற வர்த்தகப் பிரிவுகளைப் போல் அல்லாமல், இதில் பணியாற்றுவதற்கு தனிப் பண்பும், திறமையும் தேவையாய் உள்ளது.

தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இணைய வழி வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி, வேகமாக வளர்ந்து வருகிறது.

எனவே, இதில் ஈடுபடும் நிறுவனங்கள் எப்படியாவது தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பிரிவின் வாடிக்கையாளர்கள், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும் முன், அதற்கெனத் தனியே ஏதேனும் அப்ளிகேஷன்கள் உள்ளனவா என்று ஆர்வத்துடன் தேடுகின்றனர். வாடகைக் கார் ஓட்டுநர்கள் கூட, தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கின்றனர்.

இதனால் தான், மும்பையில் இயங்கும் வாடகைக் கார் இணைய நிறுவனமான Bookmycab.com நிறுவனத்திற்கு, பங்கு முதலீடு அதிகமாகக் கிடைத்துள்ளது.

இந்த அசுர வளர்ச்சிக்கு, இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் முனைப்பான டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஒரு காரணமாகும். திடீரென 25 கோடியாக உயர்ந்த இணைய வர்த்தக வாடிக்கையாளர் எண்ணிக்கை, இப்பிரிவின் வளர்ச்சியை அடையாளம் காட்டியுள்ளது.

தொலை தொடர்பு கட்டமைப்பு, புதுமையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஆன்லைனில் எளிதாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவை, இணைய வர்த்தகத்தில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன.

இணைய வர்த்தகப் பிரிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடைகள் பிரிவுகளில் தான், மிக அதிகமாக வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில், திடீரென 80% வளர்ச்சியை மேற்கொண்ட இந்தப் பிரிவில் வரும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) தேர்விற்கான 17 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது

TNPSC NEWS | 117 குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) தேர்விற்கான 117 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.

இத்தேர்வுக்கென நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் (Rejection List) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிராகரிப்புப்பட்டியலில் இடம்பெறாத விண்ணப்பதாரர்கள், சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு, 12.02.2015 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரரின் பெயர்

இப்பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID)

விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்)

கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி

வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி:

நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

Sunday, 8 February 2015

காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது (S.I OF POLICE RECRUITMENT NOTIFICATION)




காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இந்திய குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 23-ஆம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறும்.

984 காலிப் பணியிடங்கள், 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு (காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதார்களைக் கொண்டு நிரப்பப்படும்) இந்தத் தேர்வு நடைபெறும்.

இந்த காலிப் பணியிடங்களில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் காவல் துறைக்கு 20 சதவீதம், விளையாட்டுத் துறைக்கு 10 சதவீதம், சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீடு 10 சதவீதமும் ஆகும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியின்போது 20 வயது நிறைவு பெற்றவராகவும், 28 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு, வயது உச்ச வரம்பு தளர்வு, தகுதிகள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், நேர்காணல் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 6 February 2015

Job In Mindtree Ltd.

Company              : Mindtree Ltd.
Website                : www.mindtree.com
Education            : BE/BTech (CS, IT, ECE, Telecom, Instrumentation)
Experience            : Fresher
Location                : Bangalore
Position                  : Engineer
Job Location         : Bangalore
Event Date            : 09 Feb 2015

Last Date to apply: 08 Feb 2015

Salary offered        : Rs.320000/-
Experience Required: Fresher
Additional Details:
About Mindtree:
Mindtree is a USD 500+ million IT services company, delivering  technology services and accelerated growth for Global 1000 companies, by solving complex business challenges with breakthrough technical innovations. Mindtree specializes in e-commerce, mobility, cloud enablement, digital transformation, business intelligence, data analytics, testing, infrastructure, EAI and ERP solutions.
We are among the fastest growing technology firms globally with more than 200 clients and offices in 14 countries. We deliver amazing results: Helping 100 million passengers fly safely. Improving security and performance for one of the world’s largest e-commerce stores. Unifying brand messaging and improving engagement for one billion consumers. For Mindtree, “Welcome to possible” is more than a slogan – it reflects our approach to every engagement.
Eligibility:
2014 batch BE/BTech (CS, IT, ECE, Telecom, Instrumentation)
Good academics (65% and above in Xth/ XIIth and graduation)
Good pH score
Job Description:
Selected candidates would be assigned to any of Mindtree’s client projects across the industry groups of BFSI / Travel & Transport / Hi-Tech / Consumer, Retail & Manufacturing
Notes:
Company spends considerable effort in training new employees. Candidates seeking a solid technology foundation and are willing to commit to a 24 months tenure may apply
Training period is for a duration of 3 months. During the training period, candidates will be paid a stipend of Rs. 18,000/- PM
Event Dates:
Bangalore : 23rd January
Bangalore : 5th and 6th February
Delhi : 9th and 10th February
Kolkata : TBD (2nd week of February)
Why eLitmus recommends Mindtree?
Mindtree is an award winning, expertise led organization which has many FORTUNE 500 clients. As it is in a growth mode, it will open opportunities to learn quickly and develop your career. Beginning next batch, all entry level hires at Mindtree will undergo a first of its kind training at Kalinga, a fully residential learning center Mindtree has set up in Bhubaneswar. The methodology for training is very unique and will help you become a successful professional and individual in the long run. Essentially, the focus is on “You” unlike most of the other companies whose only focus is to make you billable. We, at eLitmus, have reviewed it and hence can vouch for the same.
Please note: Bhubaneswar will just be a training location. You will be posted at a regular Mindtree work location thereafter (predominantly in Bangalore)
More Info @ http://wavtechsolutions.in/job-opening/

Job In Uber Content

Company     :  Uber Content
Website       : www.ubercontent.in
Education   :  B.Sc – Any Specialization, B.A – Any Specialization
Experience : 0 Years
Location     : Navi Mumbai
Uber Content
Uber Content is a start-up in the new media space aimed at “Crafting Experiences through consumer focused content”
We are a bunch of creative, technical and analytical enthusiasts aiming to redefine the way content is created, distributed and managed.
Converging the best practices of technology and analytics we aim to create for our customers Content Powered Revenue earning products and solutions
Uber Content is backed by REIN labs and the Promoters of Free Press Journal
Walk-in Interview For Content Executive Freshers on 7th February 2015 @ Navi Mumbai
Salary                    : 1,25,000 – 1,50,000 P.A
Industry               : Internet / Ecommerce
Functional Area: IT Software – eCommerce, Internet Technologies
Role                         : Fresher
Job Description :
Walk-in for Content Executive (Freshers) at Uber Content on 7th Feb, 2015 from 11:00 am to 1:00 pm
Designation: Content Executive
Eligibility: 2013/2014 Pass Outs are eligible
6 Month Internship and post 6 month full time employment with a post-dated letter
Job Description:
Conceptualise, research and create content as per customer and internal guidelines with adherence to processes and quality. Conduct online research and maintain a structured database. Using excel and other tools, create reports which capture information accurately and provide meaningful insights.
Desired Profile :
Knowledge:
Consistent Academic Record
Awareness of e-commerce and retail industry
Knowledge of MS Office
Skills:
Listening & Comprehension Skills
Ability to extract briefing
Presentation Skills
Team Player
Time Management
Attitude:
Self-motivated and enthusiastic
Research Oriented
Keen Learner / Learning mind-set
Inquisitive and creative
Reporting Date: 07/02/2015
Reporting Time: From 11:00 am to 1:00 pm
Address for Interview:
Free Press House, 2nd Floor, 
Free Press Journal Marg, 215, Nariman Point,
Mumbai 400021
Contact Person: Aditi Rao
Interested candidates can walk In with a copy of resume and a photo id proof.
More Info @ http://wavtechsolutions.in/job-opening/